ஏர் இந்தியா விபத்து - மாண்டோரில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானி

படம்: youthparliamentofindia.co.in
ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானி (Vijay Rupani) காலமானார்.
அவருக்கு வயது 69.
லண்டனில் இருக்கும் குடும்பத்தாரைச் சந்திப்பதற்காகத் திரு ருபானி பயணம் மேற்கொண்டதாக The Hindu செய்தி நிறுவனம் சொன்னது.
1980களில் பாரதிய ஜனதாக் கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து கட்சி உறுப்பினராக இருந்த திரு ருபானி 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை குஜராத்தின் முதலமைச்சராகச் சேவையாற்றினார்.
கிருமிப்பரவல் சூழலிலிருந்து குஜராத் மீண்டுவர அவர் முக்கியப் பங்காற்றியதாக NDTV செய்தி நிறுவனம் கூறியது.
திரு ருபானியின் மறைவுக்கு பாரதிய ஜனதாக் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர்.
ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.