Skip to main content
"நின்றாலும் கால் இல்லாதது போல் இருக்கிறது": மகாதீர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"நின்றாலும் கால் இல்லாதது போல் இருக்கிறது": மகாதீர்

வாசிப்புநேரம் -
"நின்றாலும் கால் இல்லாதது போல் இருக்கிறது": மகாதீர்

(கோப்புப் படம்: AFP/Mohd Rasfan)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவின் முன்னைய பிரதமர் மகாதீர் முகம்மது (Mahathir Mohamad) கீழே விழுந்ததிலிருந்து காலின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி உடற்பயிற்சி செய்தபோது கீழே விழுந்துவிட்டதாக அவர் வலையொலிப் பதிவு ஒன்றில் கூறினார்.

இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தலையில் அடிபட்டது.

திரு மகாதீரின் வயதைக் கருத்தில்கொண்டு அறுவைச் சிகிச்சை வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனால் குணமடைய அதிக நாள் ஆனது என்றும் வலியும் அதிகமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

இப்போது மூன்று மாதங்களான பிறகு தம்மால் நிற்கமுடிகிறது. ஆனால் கால் இல்லாதது போல் இருப்பதாக அவர் சொன்னார்.

திரு மகாதீர் கடந்த ஆண்டு ஜூலையில் 100 வயதுப் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்