மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சிறைத் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது - தகவல்கள்
வாசிப்புநேரம் -
AFP
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு (Najib Razak) விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அவருக்கு 12 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அது இப்போது 6 ஆண்டாகக் குறைக்கப்பட்டிருப்பதாக மலேசிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட தகவல் அறிந்த வட்டாரங்கள் CNAவிடம் தெரிவித்துள்ளன.
அரச மலேசிய மன்னிப்பு வாரியம் தண்டனையைக் குறைக்கும் முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
அந்தத் தகவல் உறுதிசெய்யப்பட்டால் நஜிப்பின் சிறைத்தண்டனை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு முடிவடையும்.
நன்னடத்தை கருத்தில் கொள்ளப்பட்டால் அவர் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே சிறையிலிருந்து வெளியேறிவிடலாம்.
அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 44.4 மில்லியன் டாலர் அபராதமும் குறைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அது எவ்வளவு குறைக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.
மலேசியாவின் 1MDB ஊழல் வழக்கில் நஜிபுக்குச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டன.

ஆதாரம் : CNA