பிலிப்பீன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடார்ட்டே கைது

AP Photo/Vernon Yuen
பிலிப்பீன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigo Duterte) கைது செய்யப்பட்டுள்ளார்.
டுட்டார்டேவுக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியது.
அவர் இன்று (11 மார்ச்) ஹாங்காங்கிலிருந்து மணிலா விமான நிலையம் சென்றடைந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
"போதைப் புழக்கத்துக்கு எதிரான போர்" என்ற பெயரில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகக் கைதாணை குறிப்பிட்டுள்ளது.
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் அவருக்குக் கைதாணை பிறப்பித்தால் கைதாவதற்குத் தயார் என்று டுட்டார்டே முன்பு கூறியிருந்தார்.
அவர் பிலிப்பீன்ஸைச் சென்றடைவதற்கு விமான நிலையத்தில் காவல்துறைத் தலைவரும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றப் பிரதிநிதியும் காத்திருந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் கூறின.