Skip to main content
முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் காலமானார்: பேச்சாளர் தகவல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் காலமானார்: பேச்சாளர் தகவல்

வாசிப்புநேரம் -
முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் காலமானார்: பேச்சாளர் தகவல்

(கோப்புப் படம்: AP/Andrew Medichini)

வெளியீடு : 31 Dec 2022 06:23PM புதுப்பிப்பு : 31 Dec 2022 06:50PM

முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் (Benedict) வத்திக்கனிலுள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் (Mater Ecclesiae Monastery) இன்று (டிசம்பர் 31) காலமானார். 
அவருக்கு வயது 95.

ரோமிலுள்ள கத்தோலிக்கத் திருத்தந்தையின் ஆட்சிப்பீடப் பேச்சாளர், அந்தத் தகவலை வெளியிட்டார்.

போப் பதினாறாம் பெனடிக்ட், காலை மணி 9.34க்குக் காலமானதாக அவர் சொன்னார்.

அவரது நல்லுடல், இறுதி மரியாதைக்காக திங்கட்கிழமையிலிருந்து St Peter's Basilica-தேவாலயத்தில் வைக்கப்படும் என்று வத்திக்கன் தெரிவித்தது.

மூப்படைவதன் காரணமாக, போப் பதினாறாம் பெனடிக்ட்-இன்  உடல்நலம் மோசமாகிவருவதாக, முன்னதாக இந்த வாரம் தகவல் வெளியானது.

2013ஆம் ஆண்டில் அவர் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். 600 ஆண்டுகளில் அவ்வாறு செய்த முதல் போப் அவர்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்