தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: JUNG YEON-JE / POOL / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி நாட்டில் ராணுவ ஆட்சியை அறிவித்து, அதைச் சில மணி நேரத்தில் மீட்டுக்கொண்டார்.
அவர் நாட்டில் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக ஏற்கெனவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
யூன் பின்னர் அதிபர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
மேல் விசாரணை மேற்கொண்டு, யூன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய புதிய குற்றச்சாட்டைக் கொண்டுவர முடிவெடுத்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

ஆதாரம் : Others