Skip to main content
தக்சினுக்கு மன்னிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தக்சினுக்கு மன்னிப்பு

வாசிப்புநேரம் -
தக்சினுக்கு மன்னிப்பு

Chanakarn LAOSARAKHAM / AFP

தாய்லந்தின் முன்னைய பிரதமர் தக்சின் ஷினவாட்டின் (Thaksin Shinawatra) தண்டனை ரத்துசெய்யப்படவுள்ளது.

8 மாதச் சிறைத்தண்டனைக்குப் பிறகு சென்ற மாதம் நன்னடத்தையின் பேரில் அவர் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜூன் மூன்றாம் தேதி அரசி சுதிடாவின் பிறந்தநாளையொட்டி குறிப்பிட்ட சில கைதிகளுக்கு அரச மன்னிப்பு கொடுக்கப்படுமென நேற்று (2 ஜூன்) அறிவிக்கப்பட்டது.

திரு தக்சினுக்கு அரச மன்னிப்புகொடுக்கப்படுவது அப்போது உறுதியானது.

என்றாலும் அவரை அதிகாரபூர்வமாய் விடுதலை செய்து அவர் காலில் கட்டப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கருவியை நீக்கச் சில நிர்வாக விதிமுறைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்