Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'ஈராக்... இல்லையில்லை உக்ரேன்...' - குழம்பிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்

வாசிப்புநேரம் -
'ஈராக்... இல்லையில்லை உக்ரேன்...' - குழம்பிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்

(கோப்புப் படம்:  AFP)

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் (George W. Bush), உக்ரேன் என்று சொல்வதற்குப் பதில் ஈராக் மீதான படையெடுப்பு 'கொடூரமானது' என்றும் 'நியாயமற்றது' என்றும் கூறியுள்ளார்.

தவற்றை உணர்ந்ததும் தாம் சொல்லவந்தது, உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு என்று திருத்திக்கொண்டார்.

அமெரிக்காவின் டாலஸ் (Dallas) நகரில் உரையாற்றியபோது அவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் ரஷ்யாவின் அரசியல் அமைப்பைக் குறைகூறிக்கொண்டிருந்தார்.

'ஈராக் மீதான கொடூரமான, நியாயமற்ற படையெடுப்பு ஓர் ஆடவரின் முடிவு...' என்று கூறிய திரு. புஷ், தலையை ஆட்டி, 'நான் சொல்லவந்தது உக்ரேன்' எனச் சொல்லித் திருத்திக்கொண்டார்.

அந்தத் தவற்றுக்குத் தமது வயதே காரணம் என நகைச்சுவையாகச் சொன்னார் திரு. புஷ். 

2003ஆம் ஆண்டு திரு. புஷ் அமெரிக்க அதிபராக இருந்தபோது, அமெரிக்கா, ஈராக் மீது படையெடுத்தது.

அங்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது.

ஆனால் அங்கு அத்தகைய ஆயுதம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஈராக்கியப் போரில் ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் புலம்பெயர நேரிட்டது.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்