Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் 100ஆவது பிறந்தநாள் இன்று

வாசிப்புநேரம் -
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் 100ஆவது பிறந்தநாள் இன்று

(கோப்புப் படம்: Alex Brandon/Pool via REUTERS)

அமெரிக்காவின் முன்னைய அதிபர் ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter) 100ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார்.

ஜனநாயகக் கட்சி உறுப்பினரான திரு கார்ட்டர், 1977 முதல் 1981 வரை அதிபர் பொறுப்பிலிருந்தவர்.

அதிபர் பதவியைத் துறந்த பிறகு பலதரப்பட்ட மனிதநேய நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருந்தார்.

உலகெங்கும் பல நாடுகளில் மனித உரிமையை ஊக்குவிக்கவும் வறுமையைத் துடைத்தொழிக்கவும் அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.

அவரது சேவையைப் பாராட்டி 2002ஆம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

அமெரிக்க அதிபர்களில் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற பெருமையும் திரு கார்ட்டரைச் சேரும்.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்