Skip to main content
நரியைப் போல் கண்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நரியைப் போல் கண்கள் - சிகிச்சை ஆபத்தானதா?

வாசிப்புநேரம் -
அழகுசீர் அறுவைச் சிகிச்சைகளில் இப்போது "நரிக் கண்கள்" சிகிச்சை பிரபலமாகியிருக்கிறது.

ஆனால் அதைச் செய்துகொண்ட பிரேசிலிய இணையப் பிரபலம் மாண்டார்.

அடேர் மெண்டெஸ் டுட்ரா ஜுனியர் (Adair Mendes Dutra Junior) "நரிக் கண்கள்" சிகிச்சையைப் பெற்ற பிறகு தொற்று ஏற்பட்டதாகப் புலம்பினார்.

அவர் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் சிகிச்சையைப் பெற்றார்.

இம்மாதம் 3ஆம் தேதி உயிரிழந்தார்.

அவர் சிகிச்சையின் விளைவாகத் தான் மாண்டாரா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும், அதைக் குறித்துச் சர்ச்சை எழுந்துள்ளது.

"நரிக் கண்கள்" சிகிச்சை என்றால் என்ன?

கண்களின் ஓரங்களை உயர்த்தி கண்களின் உருவத்தை மாற்றி அமைக்கும் சிகிச்சை.

கன்னத்தையும் புருவத்தையும் உயர்த்தி, கீழ் கண்ணிமையைச் சிறிதாக்கிக் கண்கள் நரிகளின் கண்களைப் போன்று மாற்றியமைக்கப்படுகின்றன.

இந்தச் சிகிச்சை சமூக ஊடகங்களில் பிரபலமானது.

சமூக ஊடகங்களில் படங்களைத் தொகுக்கும்போது கண்களை அவ்வாறு மாற்றிப் பதிவிடுவதால் பலரும் இப்போது சிகிச்சையை நாடுகிறார்கள்.

ஆபத்துகள்?

சிகிச்சை ஒருவரின் தோற்றத்தைச் சிதைக்கக்கூடும். தோல் சுருக்கம், தொற்று, உறைவு ஆகிய விளைவுகளும் ஏற்படலாம்.
ஆதாரம் : Others/Hindustan Times

மேலும் செய்திகள் கட்டுரைகள்