பிரான்ஸில் மாணவர்களுக்குக் கைத்தொலைபேசி கிடையாது?
This audio is generated by an AI tool.
பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட இளையர்களுக்குச் சமூக ஊடகத் தடை விதிக்கும் மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்நாட்டு மக்களவையில் அந்த மசோதா பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது.
பிரெஞ்சு பிள்ளைகளையும் பதின்ம வயது இளையர்களையும் பாதுகாப்பதற்கு அது ஒரு முக்கியமான வாக்கெடுப்பு என்று அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மக்ரோன் (Emmanuel Macron) குறிப்பிட்டார்.
பள்ளிகளில் கைத்தொலைபேசிகளைத் தடை செய்யவும் மசோதா முனைகிறது.
அடுத்து செனட் சபையில் வாக்களிப்பு நடைபெறும்.
அங்கும் பெரும்பான்மை வாக்குகள் பெற்றால் அது சட்டமாக்கப்படலாம்.
சமூக ஊடகம் பிள்ளைகளின் வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்றும் மனநலப் பிரச்சினைகள் ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த ஆண்டு (2026) செப்டம்பரில் பள்ளிப் பருவம் தொடங்குவதற்கு முன்பு புதிய நடவடிக்கைகளை அமல்படுத்த அதிகாரிகள் முற்படுகின்றனர்.