Skip to main content
பிரான்ஸ் ரத்த வங்கியில் இணையத் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிரான்ஸ் ரத்த வங்கியில் இணையத் தாக்குதல்

வாசிப்புநேரம் -
பிரான்ஸ் ரத்த வங்கியில் இணையத் தாக்குதல்

Unsplash/Aman Chaturvedi

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 05 Nov 2026 09:59AM புதுப்பிப்பு : 05 Nov 2026 03:08PM

பிரான்ஸின் ரத்த வங்கிக் கட்டமைப்பில் இணையத் தாக்குதல் நடந்துள்ளது. 

ஐரோப்பிய நாடுகளின் பேரங்காடிகள் அத்தகைய தாக்குதலுக்கு இலக்கான அதே நேரம் ரத்த வங்கியும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரான்ஸில் உள்ள மூன்று வட்டாரங்களில் ரத்த வங்கிகளின் குளிர்சாதனக் கட்டமைப்புகள் தாக்கப்பட்டன. 

எனினும் ரத்த விநியோகத்தில் பாதிப்பில்லை என்று வங்கியின் பேச்சாளர் கூறினார்.

எந்நேரமும் ரத்தம் தேவைப்படலாம் என்பதால் வங்கியில் எப்போதும் ஊழியர்கள் இருப்பார்கள்.

குளிர்சாதனப் பெட்டியில் சிக்கல் என்று எச்சரிக்கை கிடைத்தவுடன் அதனுடன் தொடர்பில்லாத மற்ற குளிர்சாதனப் பெட்டிகளுக்கு ரத்தம் மாற்றப்பட்டதாகப் பேச்சாளர் சொன்னார்.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாகப் பிரெஞ்சு சுகாதார அமைச்சு சொன்னது.

அதேவேளையில் 8 ஐரோப்பிய நாடுகளில் உள்ள பேரங்காடிகளில் குளிர்சாதனப் பெட்டிகள் இணையத் தாக்குதலுக்கு ஆளாகின.

பெரிய அளவில் உணவுப் பொருள்கள் வீசப்பட்டன.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்