Skip to main content
2050க்குள் கரிம எரிபொருளை முற்றிலும் கைவிடும் பிரான்ஸ்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

2050க்குள் கரிம எரிபொருளை முற்றிலும் கைவிடும் பிரான்ஸ்

வாசிப்புநேரம் -
2050க்குள் கரிம எரிபொருளை முற்றிலும் கைவிடும் பிரான்ஸ்

(படம்: Dimitar DILKOFF / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரான்ஸ் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் கரிம எரிபொருளை அறவே கைவிடத் திட்டம் வகுத்திருக்கிறது.

2030க்குள் நிலக்கரியைப் பயன்படுத்துவதில்லை.

2045க்குள் பெட்ரோலியம் இல்லை.

2050க்குள் எரிவாயு இல்லை என்பது பிரான்ஸின் திட்டம்.

கொலம்பியாவின் சாண்ட்டா மார்ட்டா (Santa Marta) நகரில், பூமியை வெப்பமடையச் செய்யும் கரிம எரிபொருளைவிட்டு மாறுவது எப்படி என்பது குறித்த முதல் அனைத்துலகக் கூட்டம் நடக்கிறது.

அதில் பிரான்ஸ் அதன் திட்டத்தைச் சொன்னது.

பிரான்சில் மின்சார உற்பத்தியில் சிறுபகுதி மட்டுமே கரிமத்தைச் சார்ந்துள்ளது. விரிவான அணுமின் நிலையங்கள் அதற்கு முக்கியக் காரணம்.

பிரான்சைப் போன்று வேறு எந்த நாடும் தெளிவான, விரிவான திட்டத்தை வகுக்கவில்லை என்று கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஐரோப்பாவில் 2ஆவது ஆகப் பெரிய பொருளாதாரத்தைப் பிரான்ஸ் கொண்டுள்ளது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்