பிரான்ஸில் கடும் வெப்பம்... நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
வாசிப்புநேரம் -
(படம்: Ludovic MARIN / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரான்ஸ் முன்னெப்போதும் இல்லாத அளவு கடுமையான வெப்பத்தை எதிர்கொள்வதாக அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மக்ரோன் (Emmanuel Macron) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
தலைநகர் பாரிஸில் பொது இடங்களில் மதுபானம் அருந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் வெப்பம் தொடர்பான பிரச்சினைகளுக்காகச் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் மருத்துவமனைகள் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.
பாரிஸில் கடந்த 24 மணி நேரத்தில் 25 மாரடைப்புச் சம்பவங்கள் பதிவாகின.
வழக்கமாக அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 10க்குக் கீழாக இருக்கும்.
மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் அதே நிலை.
ஸ்பெயினில் கடுமையான வெப்பம் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சுவிட்ஸர்லந்தில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியது.
நெதர்லந்தில் வரலாற்றில் முதல்முறையாக ஆக மோசமான சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அங்கு சில இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவானது.
ஐரோப்பாவின் கட்டடங்கள் இத்தகைய வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் வகையில் கட்டப்படவில்லை.
மேலும் மக்களும் இத்தகைய வெப்பத்துக்குப் பழக்கப்பட்டதில்லை.
ஐரோப்பாவில் பொதுவாக பெரும்பாலான வீடுகள், ஹோட்டல்களில் குளிர்சாதன வசதி இருப்பதில்லை.

ஆதாரம் : AFP