நெருப்பில் சிக்கிய பாதுகாப்பு அதிகாரி - பிரான்சில் கொலை முயற்சி விசாரணை
AP/Emma Da Silva
This audio is generated by an AI tool.
பிரான்சில் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கொலை முயற்சி நடத்தப்பட்ட சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
நாடு முழுதும் ஆசிரியர்ப் பற்றாக்குறை, பள்ளிகளில் மோசமான சூழல், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
செப்டம்பர் மாத நடுப்பகுதியிலிருந்து அவை தொடர்கின்றன.
சமூக ஊடகத்தில் வெளியான காணொளிகளில் பாதுகாப்பு அதிகாரிகள் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்படுவதைப் பார்க்கமுடிகிறது.
அதில் ஓர் அதிகாரி தீயில் சிக்கியதைக் காணமுடிகிறது.
பாதுகாப்பு ஆடை அணிந்திருக்கும் அவரின் உடலின் ஒரு பகுதி தீப்பற்றி எரிகிறது.
தீயை அணைக்கச் சிலர் உதவுகின்றனர்.
அதிகாரிக்கு இலேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.
அவரின் பாதுகாப்பு ஆடையின் ஒரு பகுதி தீயில் உருகியதாக அவர் சொன்னார்.
மேலும் சில காவல்துறையினர், பாதுகாப்பு அதிகாரிகள் மீது வெடிபொருள்கள் வீசப்பட்டது தெரியவந்திருப்பதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
சந்தேக நபர்கள் இதுவரை பிடிபடவில்லை.
அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.