Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸ்: ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம்... மக்களிடையே தொடரும் ஆர்ப்பாட்டம்

வாசிப்புநேரம் -
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாடாளுமன்றத்துக்கு எதிரே நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாட்டின் அரசாங்கம் தடைவிதித்திருக்கிறது.

அதனால் பாரிஸ் சதுக்கத்தில் திட்டமிட்டதுபோல் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

பிரான்ஸ் அரசாங்கம் ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் செய்தது குறித்து மக்களிடையில் கோபம் நிலவுகிறது. நாடாளுமன்ற வாக்களிப்பு இல்லாமல் அந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

அதன் காரணமாக அங்கு 2 நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கின்றன. இதற்கிடையே பாரிஸ் நகரில் கலகத் தடுப்புக் காவல்படைக்கும் மக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

மக்கள் பாதுகாப்புப் படையினர் மீது போட்டல்களும் பட்டாசும் வீசியதால் மோதல் நடந்தது. நாட்டின் மற்ற பகுதிகளிலும் அதுபோன்ற மோதல்கள் இடம்பெற்றன.

பாரிஸ் நகரத்தில் குப்பையைச் சேகரிக்கும் ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு மேல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

நகரின் தெருக்களில் பல்லாயிரம் டன் குப்பை குவிந்துகிடக்கிறது. வெளிநாட்டுப் பயணிகள் அங்கு செல்லத் தயங்குகின்றனர்; குறைந்த வாடிகையாளர்க் எண்ணிக்கையால் உணவக உரிமையாளர்கள் அல்லாடுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்