கத்தியால் தாக்கிய மாணவர் - உயிருக்குப் போராடும் 60 வயது ஆசிரியை
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
மாணவர் கத்தியால் தாக்கியதால் 60 வயது ஆசிரியை உயிருக்குப் போராடுகிறார்.
பிரான்ஸில் நேற்று மதியம் சம்பவம் நடந்தது.
அப்போது சந்தேகத்துக்குரிய மாணவருடன் வகுப்பறையில் மேலும் 20 மாணவர்கள் இருந்தனர்.
அவர்களின் முன்னால் மாணவர் ஆசிரியையின் நெஞ்சில் மூன்று அல்லது நான்கு முறை குத்தியதாகத் தெரிகிறது.
வகுப்பறையிலிருந்து தப்பியோடிய மாணவர் பள்ளி வளாகத்திலேயே பிடிபட்டார்.
கொலை முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தில் மாணவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு வயது 14.
தாக்குதலுக்குப் பிறகு பள்ளியில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மாணவருக்கு அரசியல் அல்லது சமய உள்நோக்கம் இல்லை என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
அண்மையில் ஆசிரியருடன் உரசல் ஏற்பட்டதால் மாணவர் அவர் மீது கோபமுற்றதாகச் சொல்லப்பட்டது.
பிரான்சின் கல்வியமைச்சர் எடுவார்ட் கெஃப்ரே (Edouard Geffray) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரான்ஸில் அது போன்ற பள்ளித் தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.

ஆதாரம் : Others