Skip to main content
ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்து - உறுதி செய்ய அனைத்துலகப் பணிக் குழு

வாசிப்புநேரம் -
ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்து - உறுதி செய்ய அனைத்துலகப் பணிக் குழு

Ludovic MARIN / AFP

வெளியீடு : 18 Apr 2026 10:18AM புதுப்பிப்பு : 18 Apr 2026 02:38PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற பயணம் தொடர்வதை உறுதிசெய்ய உதவும் பணிக்குழுவை வழிநடத்தவிருப்பதாகப் பிரான்சும் பிரிட்டனும் கூறியுள்ளன.

உலக நாடுகளைக் கொண்ட அந்தப் பணிக்குழு பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மட்டுமே செயல்படும் என்று பிரான்சும் பிரிட்டனும் வலியுறுத்தின.

வட்டாரத்தில் அமைதி உடன்பாடு உறுதியானதும் பணிக்குழு செயல்படத் தொடங்கும் என்று அவை தெரிவித்தன.

வர்த்தக விநியோகம் தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்யக் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு ஆதரவளிக்கவும் குழு செயல்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) கூறினார்.

ஏற்கனவே சுமார் 10 நாடுகள் அதற்குப் பங்களிக்க முன்வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீரிணையில் தடையற்ற பயணம் தொடர்பான இணையவழிச் சந்திப்பில் உலகின் சுமார் 30 தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அமெரிக்க, ஈரான் அதிகாரிகள் அதில் பங்கேற்கவில்லை.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்