Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸின் காட்டுத் தீச்சம்பவங்கள் - 48 பேர் கைது

வாசிப்புநேரம் -
பிரான்ஸின் காட்டுத் தீச்சம்பவங்கள் - 48 பேர் கைது

(கோப்புப் படம்: Patricia De Melo MOREIRA / AFP)

பிரான்ஸில் கோடைக்காலத்தின்போது காட்டுத் தீயை மூட்டிவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் 48 பேரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

கடந்த கோடைக்காலத்தில் அங்கு மூண்ட காட்டுத் தீச்சம்பவங்களைக் கையாள 10,000 தீயணைப்பாளர்கள்வரை பணியமர்த்தப்பட்டனர்.

65,000 ஹெக்டர் நிலப்பரப்பு தீயால் பாதிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ள 48 பேரில் 12 பேருக்கு ஏற்கெனவே ஈராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 12 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

10இல் 9 தீச்சம்பவங்கள் மனிதர்களால் ஏற்பட்டவை என்று அந்நாட்டுத் தேசிய வனத்துறை அலுவலகம் கூறியது.

சராசரியாக 10இல் 3 தீச்சம்பவங்கள் வேண்டுமென்றே தொடங்கப்பட்டவை என்றும் அது குறிப்பிட்டது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa