Skip to main content
பிரான்சில் காட்டுத்தீயால் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிரான்சில் காட்டுத்தீயால் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள்

வாசிப்புநேரம் -
பிரான்சில் காட்டுத்தீயால் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள்

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரான்சில் போர்டோ (Bordeaux)  நகருக்கு அருகே ஏற்பட்ட பெரிய காட்டுத்தீயில் இரண்டாம் உலகப் போர்க்காலத்து வெடிகுண்டுகளும் வெடிமருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட கிராமத்தில் சுமார் 180 வீடுகள் தீக்கு இரையாயின.

தீயின்போது வெடிப்புச் சத்தம் கேட்டதாய் அதிகாரிகள் கூறினர்.

எரிவாயுக் கலன் வெடித்திருக்கக்கூடும் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் அது வெடிமருந்தாக இருக்கலாம் என்று தீயணைப்புப் படைத் தளபதி தாமஸ் மிமியாக் பின்னர் கூறினார்.

ஜெர்மனி, பிரான்சைச் சேர்ந்த  வெடிபொருள்கள் போர்க்காலத்தில்  கைவிடப்பட்டிருக்கலாம் என்று மிமியாக் சொன்னார்.

கோடைக்காலம் தொடங்கியதிலிருந்து பிரான்ஸில் காட்டுத் தீச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக போர்டோவில் 40,000 ஹெக்டருக்கும் அதிகமான பகுதியில் பத்து நாளுக்குத் தீ எரிந்தது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்