Skip to main content
பெற்றோரைக் கொலைசெய்த பிரஞ்சு இளையருக்கு 12 ஆண்டுச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பெற்றோரைக் கொலைசெய்த பிரஞ்சு இளையருக்கு 12 ஆண்டுச் சிறை

வாசிப்புநேரம் -
பிரான்ஸில் பெற்றோரைக் கொலைசெய்த இளையருக்கு
12 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது.

அவர் தாய் தந்தை இருவரையும் தலையில் துப்பாக்கியால் சுட்டு பின்பு வீட்டிற்குத் தீ வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பெற்றோருக்குச் சொந்தமான கார் ஒன்றில் அவர் தப்பிச்சென்றதாக நம்பப்படுகிறது.

அப்போது அந்த இளையருக்கு 15 வயது. அவருக்குத் தொடர்புத் திறன் குறைபாடு இருப்பதாகக் கூறப்பட்டது.

சம்பவத்திற்கு 6 நாள்களுக்குப் பின் ஸ்பெயினுக்குத் தப்ப முயன்றபோது இளையர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது தமது வாழ்க்கையை மாற்றுவதற்காகப் பெற்றோரைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

சம்பவம் நடைபெற்ற காலக்கட்டத்தில் தாம் பெரும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

நிபுணர்கள் இளையருக்கு நடக்காதவற்றை நடந்ததாக நம்பும் மனநிலைப் பாதிப்பு இருந்திருக்கலாம் என்று கூறினர்.
 
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்