Skip to main content
பல மில்லியன் டாலர் மதிப்புள்ள வாழைப்பழம் திருட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

பல மில்லியன் டாலர் மதிப்புள்ள வாழைப்பழம் திருட்டு

வாசிப்புநேரம் -
பல மில்லியன் டாலர் மதிப்புள்ள வாழைப்பழம் திருட்டு

Jean-Christophe VERHAEGEN / AFP

வாழைப்பழம் மீது ஒட்டுவில்லை..

பல மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்தப் படைப்பு திருடப்பட்டுள்ளது.

பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள Pompidou-Metz அரும்பொருளகத்தில் படைப்பு இருந்தது.

நேற்று (31 மே) வாழைப்பழத்தைக் காணவில்லை என்று பாதுகாவல் அதிகாரி கவனித்தார்.

காவல்துறையிடம் புகார் அளித்ததாக அரும்பொருளகம் சொன்னது.

கலைப் படைப்பில் வேறொரு வாழைப்பழத்தையும் வைத்திருப்பதாக அது கூறியது.

இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் மாரிஸியோ கேட்டலன் (Maurizio Cattelan) கலைப் படைப்பை 2019இல் அறிமுகம் செய்தார்.

கலை என்றால் என்ன..அதன் மதிப்பு என்ன என்பதை வினவும் விதமாக அவர் கடைப் படைப்பை உருவாக்கினார்.

2024இல் அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவர் 6.2 மில்லியன் டாலருக்கு (7.9 மில்லியன் வெள்ளி) அதை வாங்கினார்.

செய்தியாளர்கள் முன்னிலையிலும் வாழைப்பழத்தைச் சாப்பிட்டார்.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்