Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைமையகத்தில் அதிரடிச் சோதனை

வாசிப்புநேரம் -
2024 பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைமையகத்தைப் பிரெஞ்சுக் காவல்துறை சோதனையிட்டுள்ளது.

பொது நிதி மோசடி, ஊழல் தொடர்பான விசாரணைகளில் அது ஒரு பகுதியாகும்.

ஏற்பாட்டுக் குழு செய்த ஒப்பந்தங்கள் தொடர்பில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் கீழ் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அரசாங்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

விசாரணைக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் குழு கூறுகிறது.

எனினும் கூடுதல் தகவல்களை அது வெளியிடவில்லை.

பிரான்சின் விளையாட்டுத்துறையைப் பாதித்துள்ள ஆக அண்மை விவகாரமாக இந்தச் சோதனை கருதப்படுகிறது.

காற்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட சில சம்மேளனங்களும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளன.

மேலும் செய்திகள் கட்டுரைகள்