பாரிஸில் காவல்துறையினரைத் தாக்கிய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
படம்: STEPHANE DE SAKUTIN / AFP
நேற்று காலை (14 பிப்ரவரி) பாரிஸிலுள்ள (Paris) Gare du Nord ரயில் நிலையத்தில் கத்தியைக் கொண்டு காவல்துறையினரைத் தாக்கிய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரெஞ்சுப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
அது பயங்கரவாதம் தொடர்பான சம்பவம் இல்லையெனக் கருதப்பட்டதாக அவர் கூறினார்.
சம்பவ இடத்திலேயே அந்த ஆடவர் உயிரிழந்ததாக அமைச்சர் சொன்னார்.
காவல் அதிகாரிகள் இருவருக்குச் சிறிய காயங்கள் உண்டாயின.
சம்பவத்தால் நேற்று காலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
காலை 7 மணிவாக்கில் நடந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பிரெஞ்சு உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.