"போட்டி குறித்து நல்லெண்ணம் இல்லை" - பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற 800 பேருக்குத் தடை
வாசிப்புநேரம் -
(படம்: X/@AFP)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறுவதிலிருந்து சுமார் 800 பேருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போட்டி குறித்து அவர்களுக்கு நல்லெண்ணம் இல்லை என்று பிரஞ்சு உள்துறை அமைச்சர் கூறினார்.
தேசியப் பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாய்க் கருதப்படும் 15 பேரும் அந்தப் பட்டியலில் உள்ளனர்.
அவர்களில் தீவிரவாதச் சித்தாந்தத்தைக் கொண்டவர்களும் உள்ளதாக அமைச்சர் கூறினார்.
ஒலிம்பிக் போட்டியில் தொண்டூழியர்கள், வரவேற்பாளர்கள், தீபம் ஏந்துபவர்கள் ஆகிய நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்கள் முன்வந்தனர்.
போட்டியின் பாதுகாப்புக் கருதி அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 180,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.

ஆதாரம் : AFP