Skip to main content
பிரான்சில் ஆசிரியரைக் கொலை செய்த மாணவருக்கு 15 ஆண்டுச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிரான்சில் ஆசிரியரைக் கொலை செய்த மாணவருக்கு 15 ஆண்டுச் சிறை

வாசிப்புநேரம் -
பிரான்சில் ஆசிரியரைக் கொலை செய்த மாணவருக்கு 15 ஆண்டுச் சிறை
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 25 Apr 2026 09:15PM புதுப்பிப்பு : 25 Apr 2026 09:50PM

பிரான்ஸில் ஆசிரியரைக் கொலை செய்த மாணவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரான அவருக்கு தற்போது வயது 19. 2023ஆம் ஆண்டில் கொலை நடந்தது. வகுப்புக் கதவை மூடிவிட்டு அவர் 53 வயது எக்னஸ் லாஸால் (Agnes Lassalle) எனும் ஆசிரியரின் மார்பில் கத்தியால் குத்தினார்.

அது வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சமையல் கத்தி என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கொலை நடந்தபோது மாணவருக்கு வயது 16.

சிறுவர் பிரிவின் கீழ் உள்ளவர் என்பதால் அவருக்கு 16 ஆண்டுகளை விடச் சற்று குறைவான தண்டனை வழங்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரினர்.

ஆசிரியரின் கொலை பிரான்சு மக்களிடையே கடுங்கோபத்தைத் தூண்டியது.

ஆசிரியரின் இறுதிச் சடங்கின்போது அவரது கணவர் சவப்பெட்டியின் அருகில் தனியாக நின்று நடனமாடிய காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்