Skip to main content
ஸ்ரீநகரில் அதிகாலையில் வெடிப்புச் சத்தம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஸ்ரீநகரில் அதிகாலையில் வெடிப்புச் சத்தம்

வாசிப்புநேரம் -
இந்தியாவின் ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் அதிகாலையில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக Hindustan Times செய்தி கூறுகிறது.

இந்தியாவின் S-400 கட்டமைப்பையும் சிர்ஸா (Sirsa), சூரத் (Surat) ஆகிய நகரங்களின் ஆகாயப்படைத் தளங்களையும் தாக்கியிருப்பதாகப் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள தகவலை இந்தியா மறுத்துள்ளது.

பாகிஸ்தானின் நடவடிக்கைகளே சண்டையை மோசமாக்கியிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) கூறியுள்ளார்.

26 க்கும் மேற்பட்ட இடங்களில் பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சியை முறியடித்ததாக இந்தியா கூறியது.

பாகிஸ்தான் படைகள் மேற்கு எல்லைகளை தொடர்ந்து தாக்கி வருவதாகவும், இந்தியாவின் இராணுவத் தளங்களைத் தாக்க ஆளில்லா வானூர்திகள், நெடுந்தூர ஏவுகணைகள், போர் விமானங்களை அது பயன்படுத்துவதாகவும் இந்தியா சொன்னது.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்