உடல்களைத் தகனம் செய்யாமல் குடும்பங்களுக்குப் போலி அஸ்தி கொடுத்த ஆடவருக்குச் சிறை

AP Photo
அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாநிலத்தில் உள்ள இறுதிச்சடங்கு நிலையத்தில் உடல்களைத் தகனம் செய்யாமல் வைத்திருந்த உரிமையாளருக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோன் ஹால்ஃபோர்ட் (Jon Hallford) சுமார் 200 உடல்களை அழுகிப்போகும் நிலையில் வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.
2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் உடல்களைத் தகனம் செய்யாமல் குடும்பங்களுக்குப் போலி அஸ்தி கொடுத்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அவ்வேளையில் ஹால்ஃபோர்ட், அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து COVID-19 உதவி நிதியாக 900,000 டாலர் பெற்றிருந்தார்.
நிதியைக் கொண்டு அவர் சொகுசுப் பொருள்களை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹால்ஃபோர்ட்டுக்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் அவருடைய மனைவி கேரி ஹால்ஃபோர்ட் (Carie Hallford) மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவரின் வழக்கு செப்டம்பரில் தொடங்கும்.