Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகளவில் வறுமையைச் சமாளிக்க பொருளியல் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் வோங்

வாசிப்புநேரம் -
பிரதமர் லாரன்ஸ் வோங், உலகளவில் வறுமையைச் சமாளிக்க வர்த்தகம், முதலீடு ஆகியவற்றின் மூலம் பொருளியல் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தடையற்ற வர்த்தகத்தின் மூலம் அதைச் செய்ய வேண்டும் என்றார் திரு வோங்.

பிரேசிலில் நடக்கும் G20 உச்சநிலைக் கூட்டத்தில் அவர் பேசினார்.

புதிய வேலை வாய்ப்புகளுக்கு ஊழியர்களை ஆயத்தமாக்குவது முக்கியம் என்றார் அவர்.

ஊழியரணி மேம்பாட்டுக்கான அணுகுமுறை குறித்துப் பகிர்ந்துகொள்வதில் சிங்கப்பூருக்கு மகிழ்ச்சி என்று திரு வோங் கூறினார்.

இதற்கிடையே, G20 நாடுகளின் தலைவர்கள் பருவநிலை உடன்பாட்டில் எந்த ஓர் இணக்கத்தையும் எட்டவில்லை.

பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நிதியை பல பில்லியன் டாலரிலிருந்து பல டிரில்லியன் டாலருக்கு அதிகரிக்க வேண்டும் என்று G20 தலைவர்கள் கூறினர்.

ஆனால் அந்த நிதி எப்படி, எங்கிருந்து கிடைக்கும் என்பது குறித்து அவர்கள் ஏதும் சொல்லவில்லை.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்