Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனுக்கு $18 பில்லியன் உதவி வழங்க G7 நாடுகள் இணக்கம்

வாசிப்புநேரம் -
உக்ரேனுக்கு $18 பில்லியன் உதவி வழங்க G7 நாடுகள் இணக்கம்

(படம்: SERGEY BOBOK / AFP)

G7 நாடுகள், உக்ரேனுக்குப் 18 பில்லியன் டாலருக்கும் மேல் உதவி வழங்க இணங்கியிருக்கின்றன.

வரும் மாதங்களில் ஆகும் செலவுக்கான பணம் அது. 

உக்ரேனுக்கு உதவத் தயாராய் இருப்பதாக G7 தலைவர்களின் நகல் கூட்டறிக்கை கூறுகிறது. 

என்ன தேவையோ அதைச் செய்யத் தயாராய் இருப்பதாக அந்தக் கூட்டறிக்கை குறிப்பிட்டது. 

உக்ரேனுக்கு மாதம் 5 பில்லியன் டாலர் தேவைப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகளும் அனைத்துலகப் பண நிதிய அதிகாரிகளும்  கூறுகின்றனர். 

அரசாங்கச் சம்பளத்தைத் தொடர்ந்து வழங்குவதற்கும் மற்ற செலவுகளுக்கும் அந்தத் தொகை அவசியம் என்றனர் அவர்கள்.  

உக்ரேனியப் பிரதமர் டெனிஸ் ஷுமைஹல் (Denys Shmyhal) ரஷ்யாவைத் தோற்கடிக்க அந்தப் பணம் தேவை என்று சொன்னார். 

போரில் எந்த அளவுக்கு ஆயுதம் முக்கியமோ அதே அளவுக்குப் பணமும் முக்கியம் என்றார் அவர். 

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்