எண்ணெய் விலை இரண்டரை விழுக்காடு சரிவு
வாசிப்புநேரம் -
படம்: LUDOVIC MARIN/REUTERS
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
G7 அமைப்பு தனது இருப்பிலிருந்து 100 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பயன்பாட்டுக்கு விடப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து எண்ணெய் விலை இறங்கியது.
உலகத் தரநிலையாகக் கருதப்படும் பிரெண்ட்டின் (Brent) விலை சுமார் இரண்டரை விழுக்காடு குறைந்து 99 டாலர் 63 காசானது (127 வெள்ளி 41 காசு).
ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் இருப்பில் உள்ள எண்ணெயைச் சந்தைக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளன.
இந்நிலையில் டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
ஐரோப்பிய நாடுகளின் முடிவு சிறப்பான ஒன்று என்று அவர் பாராட்டினார்.
டீசலின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
விலையைத் தணிக்க இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை உதவும் என்று G7 தலைவர்கள் நம்புகின்றனர்.
ஐரோப்பிய நாடுகள் அவற்றின் இருப்பைப் பயன்படுத்த அதிபர் டிரம்ப் நெருக்குதல் அளித்தார். இல்லையெனில் அமெரிக்க டீசல் ஏற்றுமதிகளைத் தடை செய்யப்போவதாக அவர் மிரட்டினார்.
அதனைத் தொடர்ந்து G7 தலைவர்களின் அறிவிப்பு வந்தது.

ஆதாரம் : Others