Skip to main content
'கனவு நகரம் குப்பை நகரானது'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

'கனவு நகரம் குப்பை நகரானது' - பாரிஸ் நடைபாதைகளில் குவிந்து கிடக்கும் குப்பை

வாசிப்புநேரம் -
பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கலாம்.

ஆனால் அந்தக் கனவு நகரம் தற்போது குப்பைகள் நிறைந்த நகரமாக உள்ளது.

குப்பைகளைச் சேகரிக்கும் நகர மன்ற ஊழியர்கள் கடந்த வாரத்திலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதே அதற்குக் காரணம்.

வரும் திங்கட்கிழமை (20 மார்ச்) வரை வேலை நிறுத்தம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

அதனால் நகரின் நடைபாதைகளில் 6,600 டன் குப்பைகள் கிடக்கின்றன.

பிரான்சில் ஓய்வு வயதை 57லிருந்து 59க்கு உயர்த்தும் மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சம்பள உயர்வு கேட்டும் பலரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எங்கும் குப்பைகள் நிரம்பிக் கிடப்பதால், ஒரு சில சுற்றுப்பயணிகள் துர்நாற்றம் குறித்துக் குறைகூறினர்.

இன்னும் சிலர் அது ஆரோக்கியமான ஜனநாயகத்தைக் குறிப்பதாகத் தெரிவித்தனர்.
 
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்