Skip to main content
மின்தூக்கியில் பலூன்கள் வெடித்ததால் இருவருக்குத் தீக்காயம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மின்தூக்கியில் பலூன்கள் வெடித்ததால் இருவருக்குத் தீக்காயம்

வாசிப்புநேரம் -
இந்திய நகரான மும்பையில் பலூன்கள் வெடித்ததால் இளம் மாணவி உட்பட இருவர் காயமுற்றனர்.

விபத்து ஒரு குடியிருப்புக் கட்டடத்தின் மின்தூக்கியில் கடந்த திங்கட்கிழமை (2 பிப்ரவரி) நடந்தது.

பாதிக்கப்பட்ட மாணவி 21 வயது ஹிமானி தாப்பிரியா (Himani Tapriya).

மற்றொருவர் 32 வயது விநியோக ஊழியர் ராஜு குமார் மஹாட்டொ (Raju Kumar Mahato).

குடியிருப்பாளர் ஒருவர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகப் பலூன்களை வாங்கியிருந்தார்.

மஹாட்டொ அவற்றை விநியோகம் செய்வதற்குச் சென்றார்.

அப்போது அவரோடு மின்தூக்கியில் தாப்பிரியாவும் மற்றொருவரும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

பலூன்களில் பலவித வாயுக்கள் நிரம்பியிருந்தன.

சில நொடிகளில் அவை வெடித்துச் சிதறின.

சம்பவத்தைக் காட்டும் கண்காணிப்புக் கேமராக் காட்சி தற்போது இணையத்தில் பரவுகிறது.

அதில் பலூன்கள் வெடித்ததில் தீ மூண்டு, அது சட்டென்று அணைவதைப் பார்க்க முடிகிறது.

தாப்பிரியாவுக்கும் மஹாட்டொவுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பலூன் கடைக்காரர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

பாதுகாப்பு விதிமீறல் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்