Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் கோல் புகுத்திய இளைய விளையாட்டாளர்....

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் E பிரிவில் ஸ்பெயின் 7-0 எனும் கோல் கணக்கில் நேற்று முன்தினம் கோஸ்டா ரிக்காவை வீழ்த்தியது.

அந்தப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த காவி 74 நிமிடத்தில் கோலைப் புகுத்தினார்.

காற்பந்து உலகில் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்படும் அவருக்கு வயது 18 மட்டுமே.

ஸ்பெயின் அணியில் ஆக இளைய விளையாட்டாளர் காவி.

இதுவே அவரது முதல் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி.

"நாட்டைப் பிரதிநிதித்து விளையாடும்போது அது பெரும் இன்பத்தைக் கொடுக்கின்றது. நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன்," என்றார் அவர்.

காவி அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு FIFAவின் சிறந்த விளையாட்டாளருக்கான விருது வழங்கப்பட்டது.

இதற்கு முன் உலகக் கிண்ணக் காற்பந்தில் 1958ஆம் ஆண்டு கோல் புகுத்திய ஆக இளையவர் பிரேஸிலின் பேலே (Pele). அப்போது அவருக்கு வயது 17.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்