Skip to main content
காஸாவில் உணவை எடுக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல், 36 பேர் பலி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காஸாவில் உணவை எடுக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல், 36 பேர் பலி

வாசிப்புநேரம் -
காஸாவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 36 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவர்கள் உதவிப் பொருள்களை எடுக்கச் சென்றவர்கள் என்று கூறப்பட்டது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க அதிகாலையில் உதவிப் பொருள்கள் வழங்கப்படும் பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர்.

இதுவரை நிவாரணப் பொருள்கள் உள்ள பகுதிகளுக்குச் சென்றவர்களில் 160க்கும் அதிமானோர் சுடப்பட்டு மாண்டதாய்க் கூறப்படுகிறது.

இஸ்ரேல், அமெரிக்க ஆதரவிலான காஸா மனிதாபிமான அறநிறுவனம் உதவிப் பொருள்களைத் தருகிறது.

ஒதுக்கப்பட்டுள்ள பாதைகளை மட்டும் பயன்படுத்தி உதவிப் பொருள்களை எடுக்கச் செல்லும்படி அறநிறுவனம் அறிவிறுத்தியுள்ளது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்