Skip to main content
காஸா நிவாரணப் பொருள் நிலையத்தில் கூட்ட நெரிசல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காஸா நிவாரணப் பொருள் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 20 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
காஸா நிவாரணப் பொருள் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 20 பேர் மரணம்

(படம்: Omar AL-QATTAA / AFP)

வெளியீடு : 17 Jul 2025 08:15AM புதுப்பிப்பு : 17 Jul 2025 12:00PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காஸாவில் நிவாரணப் பொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 20 பேர் மாண்டனர்.

இஸ்ரேலிய ராணுவப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

கூட்டத்தை நோக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் பீதியில் ஒருவரையொருவர் தள்ளத் தொடங்கினர்.

சிலர் மற்றவர்கள் மேல் ஏறி மூச்சுத் திணறிலிலிருந்து தப்பிக்க முயன்றதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் வழிநடத்தும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)நிலையத்தில் அந்தச் சம்பவம் நேர்ந்தது.

கூட்டத்தில் ஹமாஸ் தரப்பினர் இருந்ததாகவும் அசம்பாவிதத்திற்கு அவர்களே காரணம் என்றும் அறக்கட்டளை கூறியது.

எனினும் காஸா குடிமைத் தற்காப்பு அமைப்பு அதை மறுத்தது.

இஸ்ரேலிய ராணுவம் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கண்ணீர்ப் புகை பயன்படுத்தியதாகவும் அது சொன்னது.

கூட்ட நெரிசலில் மாண்டோரின் சடலங்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் காணொளியை AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காஸாவில் காயமுற்றோருக்கும் மாண்டோருக்கும் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்