Skip to main content
காஸா அமைதிக்குழுவில் மார்க்கோ ருபியோ, டோனி பிளேர்...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காஸா அமைதிக்குழுவில் மார்க்கோ ருபியோ, டோனி பிளேர்...

வாசிப்புநேரம் -
காஸா அமைதிக்குழுவில் மார்க்கோ ருபியோ, டோனி பிளேர்...
(படம்: Dante FERNANDEZ, Alex Wong/Getty Images/AFP)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) காஸா அமைதிக்குழுவின் உறுப்பினர்களை அறிவித்திருக்கிறார். - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ (Marco Rubio)
- முன்னைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் (Tony Blair)
- சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கொஃப் (Steve Witkoff)
- மருமகன் ஜெரட் குஷ்னர் (Jared Kushner)
- உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா (Ajay Banga) ஆகியோர் அதில் இடம்பெறுவதாக வெள்ளை மாளிகை கூறியது. அதுவே ஆகச் சிறந்த, ஆக அதிக மதிப்புமிக்கக் குழு என்று திரு டிரம்ப் தெரிவித்தார். காஸா அமைதிக் குழுவின் தலைவராக அதிபர் டிரம்ப் பொறுப்பு வகிப்பார். மற்ற உறுப்பினர்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படுவர் என்று அவர் சொன்னார். காஸா சண்டைநிறுத்த உடன்பாடு தற்போது 2ஆம் கட்டத்தில் உள்ளது. அதில் காஸா அமைதிக் குழு ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்