இஸ்ரேல் - ஹமாஸ் சண்டைநிறுத்தம் நடக்குமா?

(கோப்புப் படம்): Reuters/Ammar Awad
காஸாவில் சண்டை நிறுத்தத்துக்கான அறிகுறிகளைக் காண முடிகிறது.
அமெரிக்கா முன்வைத்த உடன்பாடு குறித்து இஸ்ரேலுடன் பேச்சு நடத்தத் தயார் என்கிறது ஹமாஸ்.
சமரசப் பேச்சை நடத்தி உரிய முறையில் அதைத் தொடரத் தயராய் இருப்பதாகச் சொல்கிறது ஹமாஸ்.
பாலஸ்தீன அமைப்புகளுடன் பேசிவிட்டதாகவும் அது சொன்னது.
இஸ்ரேல் இரண்டு மாதச் சண்டை நிறுத்தத்துக்கு இணங்கியிருப்பதாய் முன்னதாகக் கூறியிருந்தார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump).
இஸ்ரேலியப் பிணையாளிகளையும் பாலஸ்தீனக் கைதிகளையும் பரிமாறிக்கொள்ள சண்டை நிறுத்த உடன்பாடு வழியமைக்கும்.
காஸாவுக்கு உடனடியாக நிவாரணப் பொருள்களை அனுப்புவது, அங்குள்ள சில பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படையினரை மீட்டுக்கொள்வது உள்ளிட்ட அம்சங்களும் அதில் உள்ளன.
எகிப்தும் கத்தாரும் சமரச முயற்சியில் துணை நிற்கின்றன.
தற்காலிகச் சண்டை நிறுத்தம், நிரந்தரப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு வழியமைக்கலாம்.