காஸா சிட்டியில் போர்க்காலப் படைவீரர்
வாசிப்புநேரம் -
(படம்: Eyad BABA / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இஸ்ரேல் காஸா சிட்டியில் பல்லாயிரம் போர்க் காலப் படைவீரர்களைக் களமிறக்கத் தொடங்கியிருக்கிறது.
காஸாவின் ஆகப்பெரிய நகரான காஸா சிட்டியை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியை இஸ்ரேல் விரிவுபடுத்துகிறது.
அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சுமார் 40,000 போர்க்காலப் படைவீரர்கள் திரண்டிருப்பதாகச் சொல்கிறது இஸ்ரேலிய ஊடகம்.
காஸா சிட்டி புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் கடந்த சில நாளாகத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் செல்லாத இடங்களிலும் துருப்பினர் புகுந்திருப்பதாகச் சொல்கிறார் இஸ்ரேலிய ராணுவத் தளபதி.
அமைச்சரவையிலும், நாட்டிலும் எதிர்ப்பு நீடித்தாலும் தாக்குதலைத் தீவிரப்படுத்த உறுதியளித்திருக்கிறார் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu).

ஆதாரம் : AFP