காஸாவில் சண்டை நிறுத்தம் ஏற்பட இஸ்ரேலின் புதிய முயற்சி
Reuters/Ibraheem Abu Mustafa
இஸ்ரேல், காஸாவில் உள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பது குறித்தும் சண்டை நிறுத்தம் பற்றியும் பேச ஆக்ககரமான முடிவை எடுத்துள்ளது.
இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஸாக்கி ஹானிக்பி (Tzachi Hanegbi) அது குறித்த சந்திப்பு மீண்டும் நடைபெறும் என்றும் மேல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் சொன்னார்.
ஒப்பந்தம் எட்டப்படுவதற்குச் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சந்திப்பு, பேச்சுவார்த்தைகளின் அடுத்த கட்டத்திற்கு வழிவிடும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) தெரிவித்தார்.