காஸாவில் நடப்பது இனப்படுகொலை: ஸ்பானியப் பிரதமர்
வாசிப்புநேரம் -
படம்: AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஸ்பானியப் பிரதமர் பெட்ரொ சான்செஸ் (Pedro Sanchez) காஸா போரில் இனப்படுகொலை நடப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவ்வாறு சொல்லும் முதல் ஐரோப்பியத் தலைவர் அவர்.
நேற்று இஸ்ரேலின் தாக்குதலில் 65 பாலஸ்தீனர்கள் மாண்டதாக அங்குள்ள மீட்புப் பணியாளர்கள் கூறியிருக்கின்றனர்.
20 மாதங்களாகத் தொடரும் சண்டையில் காஸாவில் 2 மில்லியன் மக்கள் தற்போது பஞ்சத்தில் வாடுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
மே மாதம் காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுப்ப இஸ்ரேல் அனுமதி அளித்தது. ஆனால் மிகவும் மெதுவாகவே நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.
நிவாரணப் பொருள்களைப் பெறச் செல்லும் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் வழக்கமாகிவிட்டது.
இஸ்ரேல் ராணுவ நிர்வாகத்திலிருக்கும் நெட்ஸாரிம் (Netzarim) பாதையில் அந்தச் சம்பவங்கள் நடப்பதாக காஸா உள்துறைப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் கூறினார்.
திரு சான்செஸ் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குப் பல முறை கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரசல்ஸ்ஸில் நடக்கவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டுக்கு முன்னர் அவர் கருத்துக் கூறினார்.
இஸ்ரேல் அதன் மனித உரிமை உடன்பாடுகளை மீறிவிட்டதாகவும், அதனால் ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேலுடனான உறவை ரத்துச் செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார்.
திரு சான்செஸின் கருத்துகளுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்தது. வரலாற்றின் தவறான பக்கத்தில் ஸ்பெயின் இடம்பிடிக்கும் என்று இஸ்ரேல் பதில் கூறியது. அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறிய ஸ்பெயின் அரசாங்கம் விளக்கம் தரும்படி இஸ்ரேலியத் தூதருக்கு அழைப்பு அனுப்பியிருக்கிறது.

ஆதாரம் : AFP