நேப்பாளத்தில் ஆர்ப்பாட்டம் - Gen Z கொந்தளிப்புக்குக் காரணம்?
வாசிப்புநேரம் -
(படம்: PRABIN RANABHAT / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நேப்பாளத்தின் காத்மாண்டுவில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக Gen Z இளையர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
அமைதியாகத் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் பெரும் கொந்தளிப்பாக மாறியது.
நேப்பாளப் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி (KP Sharma Oli) உட்பட பல தலைவர்கள் பதவி விலகினர்.
நாடாளுமன்றத்துக்குத் தீ வைக்கப்பட்டது.
காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேர்ந்த கைகலப்பில் 22 பேர் மாண்டனர்.
சுமார் 400 பேர் காயமடைந்தனர்.
Gen Z இளையர்களின் கொந்தளிப்புக்குக் காரணம்?
நேப்பாள அரசாங்கம் சென்ற வெள்ளிக்கிழமை (5 செப்டம்பர்) Facebook, Instagram, X, YouTube உட்பட பல சமூக ஊடகத் தளங்களைத் தடை செய்தது. அதனை எதிர்த்த பல இளையர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். பேச்சுரிமைக்குத் தடை விதிக்கப்படலாமா என அவர்கள் ஆதங்கப்பட்டனர்.
காலங்காலமாகப் பொருளாதார முன்னேற்றம் தடைபட்டுள்ளது... வாய்ப்புகள் குறைவாக உள்ளன என்று இளையர்கள் குறைகூறினர். பலர் வேலை இல்லாமல் திண்டாடுகின்றனர். சென்ற ஆண்டு 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் சுமார் 21 விழுக்காடு என உலக வங்கி (World Bank) குறிப்பிட்டது.
அரசியல்வாதிகளின் பிள்ளைகளின் சொகுசு வாழ்க்கை இளையர்களைக் கோபமடையச் செய்தது.
ஊழல், மோசமான நிர்வாகம் ஆகிய காரணங்களும் இளையர்களின் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதாக நம்பப்படுகிறது.
அரசாங்கம் ஏன் தடை விதித்தது?
சமூக ஊடகத் தளங்கள் அந்நாட்டின் தொடர்பு, தகவல் அமைச்சு கொடுத்த காலக்கெடுவுக்குள் தங்களைப் பதிந்துகொள்ளத் தவறியதால் அவை முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவை பதிவு செய்துகொள்ள சென்ற மாதம் 28ஆம் தேதி முதல் ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை சென்ற செவ்வாய்க்கிழமை (9 செப்டம்பர்) மீட்டுக்கொள்ளப்பட்டது.

ஆதாரம் : AGENCIES