வேலைக்கு ஆள் தேவை - இந்தியாவை நாடுகிறது ஜெர்மனி
This audio is generated by an AI tool.
ஜெர்மனி, திறன்வாய்ந்த ஊழியர்களுக்கான பற்றாக்குறையைக் கையாள இந்தியா பக்கம் திரும்பியிருக்கிறது.
ஜெர்மனியில் முதலாளிகள் பலரும் ஊழியர்களின்றி அவதிப்படுவதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது
கசாப்புக் கடைக்காரர்கள், தச்சர்கள், பேக்கர்கள் எனப் பல்வேறு துறைகளில் ஆள் தேவை.
ஆனால் அந்தத் துறைகளை ஜெர்மானிய இளையர்கள் விரும்புவதில்லை.
வர்த்தகம் நிலைக்க வெளிநாட்டு ஊழியர்களை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர் முதலாளிகள்.
2022ஆம் ஆண்டு ஜெர்மனியில் கசாப்புத் துறையில் பயிற்சி பெற 13 இந்தியர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இப்போது ஜெர்மனியின் கசாப்புக் கடைகளில் 200 இளம் இந்தியர்கள் வேலை செய்கின்றனர்.
ஜெர்மனியின் பொருளாதாரம் தாக்குப்பிடிக்க ஆண்டுதோறும் 288,000 வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்க வேண்டும் என்று BBC கூறியது.
இந்தியாவிலோ 25 வயதுக்குக் கீழ் உள்ள இளையர்கள் 600 மில்லியன் பேர் உள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் 12 மில்லியன் பேர் மட்டுமே ஊழியர் அணியில் சேர்கின்றனர். எனவே மனிதவளத்துக்குப் பஞ்சமில்லை.
அதிகமான சம்பளம், உயர்ந்த வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு ஆகிய காரணங்களால் ஜெர்மனியைத் தேர்ந்தெடுத்ததாக இந்தியர்கள் சிலர் கூறினர்.
2024ஆம் ஆண்டு ஜெர்மனியில் சுமார் 136,600 இந்தியர்கள் வேலை செய்தனர்.
2015ஆம் ஆண்டு அது சுமார் 23,300ஆக இருந்தது.