Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'உக்ரேன் ரஷ்யாவிடம் சரணடைவது மேல்' என்று ஜெர்மனி கூறியதா?

வாசிப்புநேரம் -

ஜெர்மனியின் அரசாங்கம் உக்ரேன் ரஷ்யாவிடம் சரணடைவது மேல் என்று கூறியதாகச் சொல்லும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கருத்தை ஜெர்மனி நிராகரித்திருக்கிறது.

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அந்தப் பிரச்சினை சீக்கிரம் முடிவுபெற உக்ரேன் சரணடைய வேண்டும் என்றும் ஜெர்மனியின் அரசாங்கம் ஒரு கட்டத்தில் கூறியதாகத் திரு ஜான்சன் CNN Portugal செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அதன் முடிவுக்கு ஜெர்மனி பொருளியல் காரணங்களைச் சுட்டியதாக அவர் சொன்னார்.

ஜெர்மனியின் அரசாங்கப் பேச்சாளர் அதை நிராகரித்திருக்கிறார்.

முன்னாள் பிரதமர் ஜான்சன் எப்போதும் தனக்கென ஒரு வகை உண்மையை வைத்திருப்பார் என்று அவர் சொன்னார்.

திரு ஜான்சன் செய்தியாளராக இருந்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமர் ஆகிய பொறுப்புகளை வகித்தபோதும் மீண்டும் மீண்டும் பொய் கூறியதாகக் குறைகூறல்கள் எழுந்திருக்கின்றன.

-AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்