கரைக்கு அருகே திமிங்கிலம் - காப்பாற்ற முயற்சி
(படம்: Ulrich Perrey / DPA / AFP)
This audio is generated by an AI tool.
ஜெர்மனியின் வடக்கே பால்டிக் கடலின் கரைக்கு அருகே திமிங்கிலம் ஒன்று காணப்பட்டுள்ளது.
அதைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
அது humpback வகை திமிங்கிலம் போல் தெரிவதாகக் கூறப்பட்டது.
திமிங்கிலம் கடலின் ஆழமான பகுதிக்குச் செல்வதற்குக் கப்பல்களைக் கொண்டு அலைகள் உருவாக்கப்பட்டன.
ஆனால் பலனில்லை.
திமிங்கிலத்தைச் சுற்றியிருந்த வலையின் ஒரு பகுதியை மீட்புப் பணியாளர்கள் அகற்றிவிட்டனர்.
திமிங்கிலம் வலுவிழந்து காணப்பட்டதாகவும் அது அவ்வப்போது சத்தமிட்டதாகவும் NDR செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அதன் மீட்புப் பணிகளில் வனவிலங்கு நிபுணர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இரு வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியின் பால்டிக் கடலின் கரைக்கு அருகே மீன் வலையில் சிக்கிக்கொண்ட திமிங்கிலம் அதுவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.