Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

7 கோல்களுடன் போஸ்னியாவை வீழ்த்திய ஜெர்மனி

வாசிப்புநேரம் -
நேஷன்ஸ் லீக் (Nations League) குழுப் பிரிவு காற்பந்தாட்டத்தில் நேற்று ஜெர்மனி 7 கோல்களுடன் மகத்தான வெற்றிபெற்றது.

அது போஸ்னியாவிற்கு எதிராகப் பொருதியது. ஜெர்மனி அந்த வெற்றியின் மூலம் தனது குழுவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அணியின் நிர்வாகி ஜூலியன் நாகல்ஸ்மன் (Julian Nagelsmann) சென்றாண்டு பொறுப்பேற்றதிலிருந்து ஜெர்மனி அடைந்துள்ள மிகப்பெரிய வெற்றி இது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஏற்கனவே தகுதிபெற்ற நிலையில் தமது அணி மிகச்சிறப்பாக ஆடியதை எண்ணிப் பெருமைகொள்வதாக நாகல்ஸ்மன் கூறினார்.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்