Skip to main content
30 ஆண்டுக்குப் பின் ஓநாய் தாக்குதல்: ஜெர்மனியில் பரபரப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

30 ஆண்டுக்குப் பின் ஓநாய் தாக்குதல்: ஜெர்மனியில் பரபரப்பு

வாசிப்புநேரம் -
30 ஆண்டுக்குப் பின் ஓநாய் தாக்குதல்: ஜெர்மனியில் பரபரப்பு
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜெர்மனியின் ஹாம்பர்க் (Hamburg) நகரில் கடந்த வாரம் 65 வயது மாது ஒருவரைத் தாக்கிய ஓநாய் மீண்டும் காட்டுக்குள் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மானிய சுற்றுப்புற அமைச்சு அதனைத் தெரிவித்தது.

ஓநாயின் உடலில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட பிறகு அது விடுவிக்கப்பட்டது. கருணைக் கொலை செய்வது, ஓநாயை விலங்கியல் தோட்டத்தில் விடுவது போன்றவையும் ஆலோசிக்கப்பட்டன.

ஆனால் சட்டரீதியான, நடைமுறைக்கேற்ற காரணங்களால் அவை சாத்தியம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் கடந்த திங்கட்கிழமை ஹாம்பர்க் கடைத்தொகுதியில் நடந்தது. மாதின் வாயிலும் கன்னத்திலும் காயங்கள் ஏற்பட்டன. தாக்குதலுக்கு சில நாட்கள் முன்பு ஓநாய், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற சம்பவம் முதன்முறையாக நிகழ்ந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஜெர்மானிய அரசாங்கம், பெரிய ஓநாய்ப் படைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேட்டையாட அனுமதி வழங்கியது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்