''ஜெர்மனியில் கள்ளக் குடியேறிகள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவர்''
வாசிப்புநேரம் -
(படம்: REUTERS/Jana Rodenbusch)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஜெர்மானியப் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) ஜெர்மனியில் தங்க அனுமதி இல்லாதோரைச் சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
சொலிங்கன் நகரில் கத்திக்குத்துத் தாக்குதல் நடந்த பகுதிக்குத் திரு ஷோல்ஸ் சென்றார்.
IS அமைப்பைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும் சிரியாவின் 26 வயது ஆடவர் நடத்திய தாக்குதலில் மூவர் பலியாயினர்.
அதையடுத்து தஞ்சம் தேடி வருவோருக்கு அடைக்கலம் தருவது குறித்த அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது.
சொலிங்கன் நகரில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய நபரை ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகள்படி கடந்த ஆண்டு பல்கேரியாவுக்கு அனுப்பி இருக்கவேண்டும்.
ஆனால் அவரைத் தேடி ஆடவர் தங்கியிருந்த அகதி முகாமுக்கு அதிகாரிகள் சென்றபோது சந்தேக நபர் அங்கே இல்லை என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : Reuters