Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி... ஜெர்மனியின் முடிவு திகில் படத்தைப்போல் உள்ளது

வாசிப்புநேரம் -

கத்தார் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஜெர்மனி அணி முதல் சுற்றில் வெளியேறியது ஏதோ திகில் திரைப்படம் பார்த்ததைப் போல் இருந்ததாகக் கூறுகிறார், முன்னணி வீரர் காய் ஹாவெர்ட்ஸ் (Kai Havertz). 

4 முறை வெற்றியாளரான ஜெர்மனி 4-2 என கோஸ்ட்டா ரிக்காவை (Costa Rica) வீழ்த்தியது. ஆனால் பிரிவில் மூன்றாம் இடத்தில் வந்ததால் ஜெர்மனி போட்டியில் இருந்து வெளியேறியது. 

ஜெர்மனியுடன் சமமாக 4 புள்ளிகள் எடுத்திருந்த ஸ்பெயின் (Spain) கோல் வித்தியாச அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஜெர்மனிக்கு மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஹாவெர்ட்ஸ் 2ஆவது கோலடித்தார். 

"ஜெர்மனிக்குக் கிடைத்துள்ள இந்த முடிவு, ஏதோ திகில் திரைப்படம் பார்த்ததைப் போல் இருந்தது,"

"ஆட்டம் நடைபெறும்போதே ஜப்பான் முன்னணியில் இருப்பதை அறிந்துகொண்டோம். அதன் பிறகுதான் E-பிரிவுக்கான தரவரிசை அரங்கத்தில் ஒளிபரப்பானது. அப்போதுகூட ஸ்பெயின் இன்னும் கோல்புகுத்தும் என்றுதான் நினைத்திருந்தோம்,"

"ஆனால் ஜப்பான் களமிறங்கிய ஆட்டம் முடிந்துவிட்டதைப் பின்னர் உணர்ந்தோம்,"

என ஹாவெர்ட்ஸ் சொன்னார். 


இதற்கு முன் ஜப்பானுக்கு எதிராக விளையாடிய ஜெர்மனியின் ஆட்டத்தை ஹாவெர்ட்ஸ் குறைகூறினார். ஜெர்மனியக் காற்பந்தாட்டத்தில் எதுவும் சரியில்லை என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.

இது மிகவும் கசப்பான அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 4 ஆண்டுகளாக எதுவுமே சரியாக நடக்கவில்லை. தொடக்கச் சுற்றிலேயே இருமுறை வெளியேறிவிட்டதால் ஜெர்மனி இனியும் போட்டிக்குரிய அணியாகத் திகழ முடியாது எனத் தாம் நினைப்பதாகவும் ஹாவெர்ட்ஸ் சொன்னார். 

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்