உலகம் trending
கொல்கத்தாவில் காற்றில் ஆடும் மெஸ்ஸியின் சிலை - அகற்ற முடிவு
AFP/Dibyangshu SARKAR
இந்தியாவின் கொல்கத்தா நகரில் திறக்கப்பட்ட அர்ஜென்டினக் காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியின் (Lionel Messi) சிலை அகற்றப்படவிருக்கிறது.
AFP ஊடகம் அந்தத் தகவலை வெளியிட்டது.
மெஸ்ஸி உலகக் கோப்பையை ஏந்தியவாறு இருக்கும் அந்த 21 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட தங்கநிறச் சிலை காற்றில் ஆடுகிறது.
பரபரப்பான சாலையில் நிற்கும் அது பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்று அரசாங்கப் பொறியாளர்கள் எச்சரித்தனர்.
கயிறுகளைக் கொண்டு அதைத் தற்காலிகமாகப் பாதுகாக்கும் பணி நடக்கிறது.
கூடிய விரைவில் அதை முழுமையாக அகற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
அது எப்போது என்பது உறுதியாகத் தெரியவில்லை.
அந்தச் சிலை வேறு இடத்தில் வைக்கப்படுமா என்ற தகவலும் இல்லை.